காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு
காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு
தலவாக்கலை நகரில் கடந்த 17ஆம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று மதியம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் புத்தளம், கந்தகுடா பகுதியைச் சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதிக்கு வருகை தந்து தலவாக்கலை நகரசபையின் கடையொன்றினை கூலிக்காக பெற்று ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த இளைஞன், கடந்த 17ஆம் திகதி இரவு சக வர்த்தகர்களிடம் கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
October 21, 2017
Rating:

No comments:
Post a Comment