இலங்கையில் ஆபத்தான நிலையில் வாழும் 600000 மக்கள் ...
மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் சுமார் ஆறு இலட்சம் மக்கள் வாழ்ந்து வருவதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மண்சரிவு அபாயங்கள் காணப்படும் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய 3000 புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதிக ஆபத்து காணப்படும் பகுதிகளில் தங்கியிருப்போரை அந்த இடங்களிலிருந்து அகற்றி வேறும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆபத்தான நிலையில் வாழும் 600000 மக்கள் ...
Reviewed by Author
on
October 04, 2017
Rating:

No comments:
Post a Comment