ஐ.நா சபையின் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட தமிழர்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சவுமியா சுவாமிநாதன் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் பதவிக்கு, அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக ஒருவரை பரிந்துரை செய்திருந்தன. இந்தியா சார்பில் சவுமியா சுவாமிநாதன் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் உயர் பதவிகளில் ஒன்றான துணை இயக்குனர் பதவிக்கு, சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுமியா சுவாமிநாதன், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளாவார். குழந்தைகள் நல மருத்துவரான இவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா சபையின் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட தமிழர்
Reviewed by Author
on
October 04, 2017
Rating:

No comments:
Post a Comment