டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த தமிழக விவசாயிகள் கைது
டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 80-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரை ஏமாற்றிவிட்டு ஜந்தர் மந்தரை விட்டு சாதாரண உடையில் வெளியேறினர்.
பின்னர் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் தனித்தனியாக நுழைந்தனர். கோர்ட்டு வளாகத்தில் செய்தியாளர்கள் நிற்கும் பகுதிக்கு சென்றபோதுதான் அவர்கள் தமிழக விவசாயிகள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகள் தங்களது சட்டைகளை கழற்றி அரை நிர்வாணம் ஆனார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, பாராளுமன்றத்தெரு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விவசாயிகள் 7-வது முறையாக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்குள் நுழைந்த தமிழக விவசாயிகள் கைது
Reviewed by Author
on
October 04, 2017
Rating:
Reviewed by Author
on
October 04, 2017
Rating:


No comments:
Post a Comment