மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற ஜி.வி.பிரகாஷ்
மருத்துவ படிப்பை இழந்த மாணவி சுகன்யாவின், படிப்புக்கு தேவைப்படும் உபகரணங்கள், புத்தகங்கள் ஆகிய செலவுகள் முழுவதையும் ஜி.வி.பிரகாஷ் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி.பிரகாஷ், சமூக அக்கறையில் அதிகம் இடுபாடு கொண்டவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களுடன் கலந்துக்கொண்டார், நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார். சமீபத்தில் மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக சென்று அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.
இன்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி சுகன்யாவுக்கு மருத்துவ மேல்படிப்பை தொடர, அவரது படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
மருத்துவ கல்லூரியில் சுகன்யா என்ற மாணவி மருத்துவ படிப்பை படித்து வந்திருக்கிறார். ரூ.45 லட்சம் செலவு செய்து படித்துவந்த மாணவி சுகன்யாவின் தந்தை திடீரென மரணம் அடைந்துவிட்டதால் இந்த ஆண்டுக்கான கட்டணத்தை அவரால் செலுத்தமுடியவில்லை. இந்த நிலையில் அவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மாணவியின் மருத்துவ படிப்பு முடியும் வரை தேவைப்படும் உபகரணங்கள், புத்தகங்கள் ஆகிய செலவுகள் முழுவதையும் தான் ஏற்று கொள்வதாக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், மாணவி சுகன்யாவை நேரில் சந்தித்து கூறியுள்ளார். இது ஒரு பெரிய உதவி இல்லை என்றும் இது தனது கடமை என்றும் கூறிய ஜி.வி.பிரகாஷ், மாணவி சுகன்யா மருத்துவ படிப்பை முடித்தவுடன் ஏழைகளுக்கு சேவை செய்வதே இதற்கு அவர் காட்டும் நன்றியாக இருக்கும் என்று கூறினார்.
மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற ஜி.வி.பிரகாஷ்
Reviewed by Author
on
October 07, 2017
Rating:
Reviewed by Author
on
October 07, 2017
Rating:


No comments:
Post a Comment