சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா....
அமெரிக்கா மீண்டும் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சந்திரனுக்கு ரஷியா ‘புட்னிக்’ என்ற நாயை வெற்றிகரமாக அனுப்பி திரும்ப கொண்டு வந்தது. அதற்கு போட்டியாக அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி முதன்முறையாக மனிதர்களை அனுப்பியது.
அங்கு இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம்பெற்றது. சந்திரனில் இறங்கிய அவர் அங்கு அமெரிக்க கொடியை நட்டினார். அது உலக வரலாற்றில் பெரிய மைல் கல்லாக உள்ளது.
அதன்பின்னர் அமெரிக்கா சந்திரனில் ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு செவ்வாயில் கிரக ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்தியாவின் இஸ்ரோ மட்டுமே சந்திரனில் ஆய்வு செய்தது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா மீண்டும் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இத்திட்ட தொடக்க விழா சமீபத்தில் வாஷிங்டனில் நடந்தது. துணை அதிபர் மார்க் பென்ஸ் தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது ‘நிலாவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டம் மேற்கொள்ள இருக்கிறோம் இம்முறை வெறும் கொடியை மட்டும் நட்டிவிட்டு வரும் பயணமாக அது இருக்காது. இனி நடக்க இருக்கும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் அது தான் தொடக்க புள்ளியாக இருக்கும் என்றார்’.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப இருக்கும் திட்டத்துக்கு இது முன்னோட்டமான பயணம் என்றும் ‘நாசா’ கூறியுள்ளது.
சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா....
Reviewed by Author
on
October 09, 2017
Rating:
Reviewed by Author
on
October 09, 2017
Rating:


No comments:
Post a Comment