இன்று ஒக்டோபர் ஆறு.......நியூமன்னார் இணையக்குழுமத்தின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
இன்று ஒக்டோபர் ஆறு
இன்று ஒக்டோபர் ஆறு
நீங்கள் வாழவேண்டும் ஆண்டுகள் நூறு
அறிவுப்பசிக்கு ஊட்டுகிறீர்கள்
கல்வி எனும் சோறு
உம் நாமம் எம்க்கு திருநீறு
எடுத்து தருவோம் நல்ல பெறுபேறு
ஆசான்கள் எனும் சிற்றாறு
இருக்கும் போது ஏது இடையூறு
உம் சேவை எமக்கு நன்று
இதற்கு இவ்வுலகமே நற்சான்று
தாயைத்தேடும் கன்று
ஆசான்களை மாணவர்தாம் இன்று
எமது சிந்தையின் திறவுகோள் ஆசானே
நாம் படைக்கும் விந்தைக்கும் அச்சாணி ஆசானே
என்றும் வாழ்த்தும் எம்மனமே
இன்று உங்கள் சேவை நறுமணமே
பாரினிலே பயின்றவர்கள் புகழ்பாடும்
புதல்வர்களே ஆசான்களே
பத்துமாதம் தாயும்
பதிமூன்று ஆண்டுகள் நீங்களும்
பயிற்சி எடுத்த முயற்சியிலே
இந்த ஒக்டோபர் ஆறு
இனியெழுதும் புது வரலாறு
பாரே திரும்பிப்பாரு
எழுது புதிய காட்டாறு
வை-கஜேந்திரன்
துடிக்கும் விழிகள் நூலில் இருந்து
உலகெல்லாம் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி நியூமன்னார் இணையக்குழுமத்தின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
இன்று ஒக்டோபர் ஆறு.......நியூமன்னார் இணையக்குழுமத்தின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
Reviewed by Author
on
October 06, 2017
Rating:
Reviewed by Author
on
October 06, 2017
Rating:


No comments:
Post a Comment