ஷிரான் பாசிக்குடன் பியூமி ஹன்சமாலிக்கு தொடர்பு?
சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக்குடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை நடிகை பியூமி ஹன்சமாலி கடுமையாக மறுத்துள்ளார்.
தாம் இலங்கையில் இல்லாத நிலையில், சில முகநூல் பக்கங்கள் தம்மை தொடர்புபடுத்தி போலியான செய்திகளைப் பரப்புவதை அறிந்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஷிரான் பாசிக் யார் என்றே தெரியாது...
ஷிரான் பாசிக் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ள பியூமி ஹன்சமாலி, டுபாயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கெஹெல்பத்தர பத்மேவை மாத்திரமே சந்தித்ததாகவும், அவருடன் எவ்வித பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் உழைத்த பணமே தன்னிடம் இருப்பதாகவும், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரத்தின் ஊடாகவே முன்னேறியதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், போதைப்பொருள் அல்லது கருப்புப் பணம் தனக்குத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றிய பொய்யான பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும் பியூமி ஹன்சமாலி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Reviewed by Vijithan
on
August 20, 2026
Rating:


No comments:
Post a Comment