வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது பதவியை இராஜீனாமா செய்தார்.-Photos
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை(6) தனது பதவியை இராஜீனாமா செய்துள்ளார்.
-தனது இராஜீனாமா கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை(6) வடமாகாண சபையில் வைத்திது வடமாகாண சபையின் nவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்துள்ளார்.
-தனது இராஜீனாமா தொடர்பில் றிப்கான் பதியுதீன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,,,
கடந்த மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்தமையினால் இன்னுமொரு பிரதி நிதி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டோம்.
எனக்கு அடுத்ததாக வந்த எமது கட்சியின் மூத்த உறுப்பினர் அலிகான் ஸரீப் அவர்கள் வெற்றி பெறாத கவலை எமது கட்சியின் தலைவருக்கு இருந்தது.
எனவே அந்த கவலையை நிவர்த்தி செய்வதற்காகவும் அரசியலிலே நாங்கள் ஒரு முன் மாதிரியைக் காட்டுவதற்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வதாக தெரிவித்தார்.
வடமாகாண சபையின் உறுப்பினராக என்னைத் தெரிவு செய்த மன்னார் மாவட்ட வாக்காளர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
அதே போன்று என் மீது நம்பிக்கை கொண்டு தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்திய எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாட்; பதியுதீனுக்கும், அவர் தலைமை தாங்கும் கட்சிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
கடந்த மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகளை விட எனக்களித்த வாக்குகள் விகிதாசாரத்தில் அதிகமானது.
எனவே அந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் நான் மீண்டும் நன்றிகளைக் கூறுகின்றேன்.
இந்த சபையிலே நான் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போதும் வட மாகாண சபை மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த அத்தனை விடயங்களுக்கும் எனது பூரண ஒத்துழைப்பை நல்கி இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
அதே போன்று எங்கள் கட்சியைச் சார்ந்த ஏனைய 3 உறுப்பினர்களும் இந்த சபையின் மக்கள் நலன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கின்றார்கள் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
October 06, 2017
Rating:

No comments:
Post a Comment