முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் 2017ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசிலர்களை சிறப்பிக்கும் விழா.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் 2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசிலர்களை சிறப்பிக்கும் விழா.
பாடசாலை சமூகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட குறித்த நிகழ்வை பாடசாலை முதல்வர் திரு.செல்வநாயகம் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.
மேலும் 2017.11.09ஆம் திகதி அன்று நண்பகல் 12:00மணியளவில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.
விருந்தினர்களைக் சிறப்பித்தல் மற்றும் மங்கல விளக்கேற்றல் என பண்பாட்டு நிகழ்வுகளுடன் இந்த நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் விருந்தினர்களது உரை என்பன நடைபெற்றது.
அத்துடன் 2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசிலர்கள் பதக்கங்கள் அணிவித்தும் பரிசில்கள் வழங்கப்பட்டும் மதிப்பளிக்கப்பட்டனர். மேலும் பாடசாலையின் முதல்வர் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.
முதல்வர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்த துரைராசா – ரவிகரன் அவர்கள் சிறப்பித்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.சி.சுப்பிரமணியேசுவரன் அவர்கள் கலந்துகொண்டார். மதிப்புறு விருந்தினராக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்தியர், வைத்திய கலாநிதி திரு.ப.தயானந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்,பாடசாலையின் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் 2017ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசிலர்களை சிறப்பிக்கும் விழா.
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment