சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது! -
சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்களை நேற்று மாலை சுவிஸ் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இளைஞர்கள் இருவரும் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் 28 மாதங்கள் சென்ற பின்னர் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் மேல் முறையீடு செய்து விட்டு பதிலுக்காக காத்திருந்த வேளையில், அவர்கள் வசிக்கும் மாநில காவல்துறையால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் முறையான ஆதாரங்களை குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த வேளையிலும் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரின் குற்றச்சாட்டும் இலங்கை அரசிற்கு எதிராக இருந்ததால் இவர்களின் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில், மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் உதவியை இளைஞர்களின் பெற்றோர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது! -
Reviewed by Author
on
November 10, 2017
Rating:

No comments:
Post a Comment