99 ஆண்டுகள் குத்தகை: இலங்கையில் உள்ள துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு -
இலங்கையில் இருக்கும் துறைமுகம் ஒன்று 99 ஆண்டு குத்தகையின் பேரில் சீனாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது.
சீனா மற்றும் ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும், சாலைகளையும் இணைத்து செயல்படுத்த உள்ள பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும் என்று சீனா நம்புகிறது.
இதனால் இந்த துறைமுகத்தை சீனா, இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக அந்த நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதின் மூலம், சீனாவிடம் நாம் பெற்ற கடனை திருப்பி செலுத்த தொடங்கி உள்ளோம்.
அந்தப் பகுதியில் ஒரு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். அங்கு தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். இது பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா துறை அபிவிருத்திக்கும் உதவும் என இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இதையடுத்து துறைமுகத்தின் பாதுகாப்புப் பணியை இலங்கை கடற்படை ஏற்றுக் கொள்ளும் எனவும், சீனா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாட்டு கடற்படையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
99 ஆண்டுகள் குத்தகை: இலங்கையில் உள்ள துறைமுகம் சீனாவிடம் ஒப்படைப்பு - 
 Reviewed by Author
        on 
        
December 10, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 10, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 10, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 10, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment