யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண் -
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 32 வயதான யோகேந்திரன் பத்மாவதி என்ற பெண்ணின் சடலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பெண் வீட்டில் இல்லாததனை அறிந்து கொண்ட உறவினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் பிரதேச மக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெண்ணின் சடலம் கிணற்றில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சடலத்தை மீட்ட பொலிஸார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பெண்ணின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சந்தேகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொன்னாலையைச் சேர்ந்த இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நெடுந்தீவில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள பெண் -
Reviewed by Author
on
December 04, 2017
Rating:

No comments:
Post a Comment