பார்வையற்றவர்களுக்காக.... தமிழ்ச் சகோதரங்களின் அபார கண்டுபிடிப்பு -
அது இரத்தத்தின் வழி வந்த மரபணு. நவீன யுகத்தில் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் உலகநாடுகளோடு கடும்போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேசம் வியக்குமளவிற்கு கண்டுபிடிப்புக்களையும், ஆய்வுகளையும் செய்து சாதிக்கிறார்கள்.
இன்று சாதனை படைத்திருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இம் மூன்று சகோதரங்களினதும் இத்திறனும் அசாத்தியமானது.
வட அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழ் குழந்தைகள், திரு திருமதி சிவராஜா தம்பதிகளின் பிள்ளைகள் கீர்த்தி, கிருஷ்ணா, கெளஷியா. அவர்களது தொடர்ச்சியான ஆராய்ச்சி கண்டு பிடிப்பின் ஒரு சாதனை தான், பல அமெரிக்க பரிசுகளை பெற்றுக் கொண்ட மிகவும் வரவேற்கதக்க தொழில் நுட்ப்ப கருவி MAVI(Movement Aid for the Visually Impaired) இந்த கருவி இவ்வளவு காலமும் தடியின் உதவியுடனும் நாயின் உதவியுடனும் தமது வாழ்க்கையை நடத்தி வந்த கண் தெரியாத மக்கள் இன்று மிகவும் தன்னிச்சையாக நடப்பதற்கு உதவி புரிகிறது.
அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஏற்படக்கூடிய விபத்துக்களையும் தடுப்பதற்கும் உதவுகிறது.
இந்த கருவியை கண்டு பிடித்தது 15 வயதான கெளஷியாவும் அவரது சகோதரர்கள் கீர்த்தியும், கிருஷ்ணாவும் ஆவார்கள்.
கெளஷியா 12 வயதாக இருந்த போது Park ஒன்றில் கண் தெரியாத மனிதர் ஒருவர் பதிந்து இருந்த மரக்கிளையில் தனது தலையை கண் தெரியாததினால் அடித்துக்கொண்டதை பார்த்தார். அந்த சம்பவம் அவரது மனதில் ஆழமாக பதிந்தது. அதனால் அவர் தமது சகோதரர்கள் கீர்த்தி, கிருஷ்ணாவுடன் சேர்ந்து 3 வருடங்களாக செய்த ஆராய்ச்சியின் விளைவாகவும் பல கண் தெரியாதவர்களிடம் சென்று அவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் கஸ்ரங்களை அறிந்துகொண்டு இந்த தொழில் நுட்ப கருவியான MAVIயை கண்டு பிடித்தார்கள்.
இவர்கள் தங்களின் கண்டு பிடிப்பை எமது தாய் நாட்டில் கண் தெரியாமல் கஷ்டப்படுவோர்க்கு தாம் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். இவர்களின் இந்த சாதனையை பல அமெரிக்க ஸ்தாபனங்கள் பாராட்டி வரவேற்று பதக்கங்கள் கொடுத்துள்ளார்கள். Society ofAmerica Military Engineers(SAME), NAVY and Marine Corps Young Entrepreneurs Academy(YEA), The Dallas Regional Science & Engineering Fair(DRSEF), Texas Science and Engineering Fair(TXSEF), Business Professionals of America(BPA) என்று பல ஸ்தாபனங்கள் போற்றி பரிசு அளித்து உள்ளார்கள்.
அது மட்டும் இல்லாமல் இவர்களின் சாதனைகள் பல அமெரிக்கா தொலைக்காட்சி, பத்திரிகைகள், மகசீன்களிலும் வெளியாகியுள்ளது.இவர்களின் இந்த அரிய சாதனைக்கு பல Awards மட்டுமல்ல பல பெரியோரின் ஆதரவும் கிடைத்தது.
அவர்கள் எல்லோரையும் கூறமுடியா விட்டாலும் Mr. Peter Burns, Mr. Matt Pirtle, Mr. Jon Shaprio என்று பலர் இவர்களுக்கு மிகவும் நல்ல வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் அப்பாச்சி பத்மாவதி பாலசுப்பிரமணியம் இவர்களை சிறு வயதில் இருந்தே மிகவும் ஊக்கப்படுத்தி வந்துள்ளார். இவர்களின் தாத்தாவும் அம்மம்மாவும் பிள்ளைகள் நல்லா படிக்கிறார்களா? நன்றாக படிப்பிக்க வேண்டும்’ என்று சுகுணா சிவராஜாவிடம் பரிந்து வேண்டுவார்கள். அதேபோல் இவர்களின் பெற்றோரும் மிகவும் ஊக்கப் படுத்தும் பெற்றோராகவும் இவர்களுக்கு நல்ல வழிக்காட்டியாகவும் இருந்து வருகிறார்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
பார்வையற்றவர்களுக்காக.... தமிழ்ச் சகோதரங்களின் அபார கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
December 24, 2017
Rating:

No comments:
Post a Comment