மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி-(படம்)
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை 12-12-2017காலை மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமானது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த கண்காட்சியும்,மலிவு விற்பனையும் நாளை புதன் கிழமை(13) மாலை வரை இடம் பெறவுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை(12) ஆரம்பமாக குறித்த கண்காட்சியினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள்,என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு விற்பனையும் இடம் பெற்றது.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் குறித்த கண்காட்சி இடம் பெற்றது.குறித்த கண்ணகாட்சியில் உள்ளூர் உற்பத்திகளான மரக்கறி வகைகள்,பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள்,உணவுப்பண்டங்கள் என பல விதமான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மலிவு விற்பனையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த கண்காட்சியும்,மலிவு விற்பனையும் நாளை புதன் கிழமை(13) மாலை வரை இடம் பெறவுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை(12) ஆரம்பமாக குறித்த கண்காட்சியினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள்,என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு விற்பனையும் இடம் பெற்றது.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் குறித்த கண்காட்சி இடம் பெற்றது.குறித்த கண்ணகாட்சியில் உள்ளூர் உற்பத்திகளான மரக்கறி வகைகள்,பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள்,உணவுப்பண்டங்கள் என பல விதமான பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மலிவு விற்பனையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது சமூர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி-(படம்)
Reviewed by Author
on
December 12, 2017
Rating:
No comments:
Post a Comment