முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு-(படம்)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (11) இரவு கடற்படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஆகியோர் இணைந்து முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலில் போது சுமார் 356 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கேரள கஞ்சா பொதிகள் அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாக இருந்த நிலையிலேயே பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
-குறித்த கேரள கஞ்சா 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (11) இரவு கடற்படையினர், சிலாபத்துறை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் ஆகியோர் இணைந்து முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதலில் போது சுமார் 356 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கேரள கஞ்சா பொதிகள் அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல ஆயத்தமாக இருந்த நிலையிலேயே பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
-குறித்த கேரள கஞ்சா 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் சுமார் 3 கோடி 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு-(படம்)
Reviewed by Author
on
January 12, 2018
Rating:
Reviewed by Author
on
January 12, 2018
Rating:

No comments:
Post a Comment