அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கடிதத்தினால் சர்ச்சை.(படம்)



மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் கடமையாற்றுகின்ற சில பணியாளர்களுக்கு மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளரினால் கையொப்பமிட்டு கடந்த 4 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடுகையில்,,,,

-2018 ஆம் ஆண்டிற்கான புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுவதுடன்,பொது மக்களது போக்குவரத்து நலன் கருதி நேரக்கணிப்பாளராக பணி செய்யும் தாங்கள் எம்முடன் உடன்படிக்கை செய்து கொண்ட அகக்கட்டுப்பாட்டினை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டுகின்றோம்.

-குறிப்பாக கடமையினை உரிய நேரத்திற்கு பொறுப்பெடுத்தல்,சேவையில் ஈடுபடும் ஊர்திகளுக்கு தவறாது சந்தாப்பணம் அறவீட்டுத்துண்டு போட்டு கணக்கு முடித்தல்,நாள் வரவு பதிவேட்டில் ஒப்பமிடுதல், 'புகைத்தல்,மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றினையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறும்', பொது மக்களது போக்கு வரத்துக்கு முதன்மை அலுவலராக பணி செய்யும் தாங்கள் முற்கோபம்,பொறுமையிழந்து பேசுதல் ஆகியவற்றினை குறைத்து பணியில் ஈடுபடுமாறும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகக்கட்டுப்பாட்டினை ஒழுங்கான முறையில் கடைபிடிக்க நினைவூட்டும் குறித்த கடிதத்தில் 'புகைத்தல்,மது போதையில் பணியில் ஈடுபடுதல் ஆகியவற்றினையும் மிக முக்கியமாக கடைபிடிக்குமாறு என குறிப்பிடப்பட்டுள்ளமை பணியாளர்கள் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் கடிதத்தினால் சர்ச்சை.(படம்) Reviewed by Author on January 06, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.