அண்மைய செய்திகள்

recent
-

சூரியனை போன்று புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு


சூரியனை போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

சூரியனை போன்றே அளவும், பரப்பளவும் உள்ளது. சூரியனின் வயது அளவே இதுவும் உள்ளது. இந்த புதிய நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.

சூரியனை போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள ரசாயன பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றன. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற ரசாயன பொருட்கள் அதிக அளவில் உள்ளன.

ஆனால் புதிதாக கண்டுபிடித்துள்ள நட்சத்திரத்தில் இவை 2 மடங்கு உள்ளன. இது வெளியிடும் வெப்பம் மற்றும் ரசாயன பொருட்களால் பூமியின் தட்பவெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பருவ நிலை மாற்றம் ஏற்படுகிறது.

இத்தகவலை டென்மார்க் ஆர்கஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் கரோப் தெரிவித்துள்ளார். கெப்லர் விண்கலம் அனுப்பிய போட்டோ மற்றும் தகவல் அடிப்படையில் நடத்திய ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது.

சூரியனை போன்று புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு Reviewed by Author on January 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.