மன்னார் துரையம்மா அன்பகத்தின் ஸ்தாபகர் வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களின் 01வருட நினைவாக...
மன்னார் மாவட்டத்தில் கல்விச்சேவையினை ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தின் ஸ்தாபகர் வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களின் 01வருட நினைவினை (1ம் ஆண்டு நினைவு-12-03-2018) முன்னிட்டு விடத்தல்தீவு பள்ளமடுவில் அமைந்துள்ள மருங்கோடி முதியோர் ஓய்வகத்துக்கு பெறுமதியான உலர் உணவு பொருட்கள் (தலையனை-போர்வை-பாய்) போன்ற பொருட்கள் வழங்கி வைப்பு.
இன்று காலை 11-03-2018 10 மணிக்கு மருங்கோடி முதியோர் ஓய்வகத்துக்கு துரையம்மா அன்பகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் நேரில் சென்று மேற்குறித்த பொருட்களை வழங்கியதுடன் அங்கு இருந்த பெரியோர்களுடன் கலந்துரையாடியபோது.
மருங்கோடி ஓய்வகத்தின் பொறுப்பானவர் தனது உரையில்
- மரு-உறவு
- கோடி-ஒதுக்குப்புறம்
இவர்களுக்கான உணவுக்காக வயல்வெள்ளாமை தோட்டம் வைத்துள்ளோம். அதேபோல் இவ்வாறான பொதுஅமைப்புக்ளினதும் சில நல்ல உள்ளங்களினதும் கொடுத்துதவும் எண்ணத்தினால் இதர தேவைகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றோம். இன்னும் எமது தேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு நல்ல உள்ளங்களின் உதவிகள் தேவை எம்மால் முடிந்தவரை எமது சேவைகள் தொடரும் பல சவாலுக்குமத்தியில் அர்ப்பணிப்புடன்.
செயலாலற்றி வருவது பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதும்
எமது தேவையில்லாத களியாட்ட செலவுகளை இவ்வாறான தேவையுடையவர்களின் தேவைக்காக பயன்படுத்துவோமானால் அது சிறப்பான செயல் தர்மம் ஆகும்.
"தேவையானவற்றை தேவையானவர்களுக்கு கொடுங்கள்"
தொகுப்பு- வை-கஜேந்திரன் -
மன்னார் துரையம்மா அன்பகத்தின் ஸ்தாபகர் வே.மனுவேல்பிள்ளை(உதயன்) அவர்களின் 01வருட நினைவாக...
Reviewed by Author
on
March 11, 2018
Rating:

No comments:
Post a Comment