மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr.அரவிந்தன் பூநகரியில் விபத்தில் பலி....
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A-32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியுள்ளது.
குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ். கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான வைத்தியரான அரவிந்தன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு,பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr.அரவிந்தன் பூநகரியில் விபத்தில் பலி....
Reviewed by Author
on
March 07, 2018
Rating:

No comments:
Post a Comment