கண்பார்வை தெரியாத வௌவால்: எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே எப்படி?
ஆனாலும் அதை வைத்துக் கொண்டு தெளிவாகப் பார்க்க முடியாது என்பதால் வௌவால்கள் ஒலியை நம்பியிருக்கின்றது.
இவை வெளிப்படுத்தும் மீயொலி (Ultra sound) அலைகள் அதிக அதிர்வெண்களைக் கொண்டதாக இருக்கிறது.
மனிதர்களால் 80-20 ஆயிரம் அதிவெண் அலைகளைத் தான் உணர முடியும். ஆனால் வௌவால்களால் 1,50,000 அதிர்வெண்களை உணர்ந்துக் கொள்ள முடியும்.
அதனால் தான் வௌவால் பறக்கும் போது ஒலிகளை எழுப்பிக் கொண்டே செல்கின்றது. இந்த மீயொலிகள் எதிரில் இருக்கும் பொருள், உயிரினம் போன்றவற்றில் பட்டு, வௌவாலுக்கு வேகமாக திரும்பி வரும்.
அதை வைத்து வௌவால் எதிரில் பொருளோ, எதிரியோ இருப்பதை அறிந்து, திசையை மாற்றிக் கொண்டு, மோதாமல் பறந்து விடுகின்றது.
வௌவால் கடியினால் ஏற்படும் நோய் தெரியுமா?
வௌவால் கடித்து விட்டால், வெறிநாய் கடியினால் ஏற்படும் வைரஸ் நோயாகிய ராபீசு(rabies) உண்டாகும்.இந்த வௌவால் மட்டுமில்லாமல் பூனை, நரி, ராக்கூன் போன்ற பிற விலங்குகள் மூலமாகவும் இவ்வகை நோய் உண்டாகலாம்.
கண்பார்வை தெரியாத வௌவால்: எதன் மீதும் மோதாமல் பறக்கிறதே எப்படி?
Reviewed by Author
on
March 12, 2018
Rating:
No comments:
Post a Comment