இலங்கையருக்கு பிரான்சில் வாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி -
திங்களன்று இரவு நடந்த இந்த கொடூர தாக்குதலில் இருந்து குறித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று பாரிஸின் 10வது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தமது மனைவியுடன் இந்திய உணவகங்கள் அமைந்துள்ள பகுதியில் உணவருந்த சென்றுள்ளார்.
உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் முக மூடி அணிந்த இருவர் திடீரென்று அந்த வழியாக புகுந்து குறித்த இலங்கையரை சரமாரியாக வாளால் தாக்கியுள்ளார்.
இதில் தலை, கழுத்து, மணிக்கட்டு என உடலில் மொத்தமும் வெட்டு விழுந்துள்ளது.
குறித்த நபர் குற்றுயிராக சரிந்த நிலையில் தாக்குதல் தொடுத்த இருவரும் அங்கிருந்து மாயமாகியுள்ளனர்.
இதனிடையே குறித்த கொடூர தாக்குதலை கண்டு பயத்தில் உறைந்து நின்ற பார்வையாளர்கள் அந்த நபரை மீட்டு அடுத்துள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
படுகாயமடைந்த அவர் இன்னமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் மாயமான மர்ம நபர்கள் இருவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் தாக்குதல் தொடர்பில் உறுதியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும் இலங்கை சமுதாய மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஏற்பட்ட பிரச்னையால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் மனைவி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டனவா என்பது குறித்தும் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையருக்கு பிரான்சில் வாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி -
Reviewed by Author
on
March 08, 2018
Rating:

No comments:
Post a Comment