தங்கம் அள்ளி காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாவது இடம் !
26 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று இந்தியா மூன்றாமிடத்தை அடைந்துள்ளது.
நேற்று நடந்த விளையாட்டுகளின் முடிவில் இந்தியா எட்டு தங்கம் உள்பட 17 பதக்கங்கள் பெற்றது.
மொத்த பதக்கங்களில் அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதலில் 17 பதக்கங்கள் வென்றுள்ளது இந்தியா. அடுத்த நிலையில் மல்யுத்த பிரிவு இருக்கிறது. இதில் 12 பதக்கங்கள் பெற்றது இந்தியா. 9 பதக்கங்கள் பெற்று மூன்றாவது இடத்தில் குத்து சண்டை மற்றும் பளு தூக்குதல் பிரிவுகள் இருக்கின்றன. இறுதியாக டேபிள் டென்னிஸில் 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இறுதி ஆட்ட நாளில் சாய்னா இரண்டாம் முறையாக தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவிற்கான தனது இறுதித் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
முன்னதாக அவுஸ்திரேலியா 197 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இங்கிலாந்து 137 பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் இருக்கிறது.
இன்று மாலை நடை பெரும் இதன் இறுதி விழாவில் குத்து சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோம் இந்தியக் கொடி ஏந்தி செல்வது குறிப்பிடத்தக்கது.
தங்கம் அள்ளி காமன் வெல்த் போட்டிகளில் இந்தியா மூன்றாவது இடம் !
Reviewed by Author
on
April 16, 2018
Rating:

No comments:
Post a Comment