காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் தன்னை தமிழர் என்று சொன்னாலும், பலரும் ரஜினியை கர்நாடகாவை சேர்ந்தவர் என்றே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடிகர் சங்கம் நடத்தும் காவேரிக்கு ஆதரவான மௌன போராட்டத்தில் ரஜினி கலந்துக்கொண்டுள்ளார்.
அப்போது அவர் கலந்துக்கொள்வதற்கு முன் பேசுகையில் ‘பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை, மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது.
மேலும், காவேரிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும், ரசிகர்களும் அதை தான் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி கமல் என்னுடைய எதிரி இல்லை, லட்சம், ஊழல், வறுமை தான் என கூறியுள்ளார்.
காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி
Reviewed by Author
on
April 08, 2018
Rating:

No comments:
Post a Comment