க.பொ.த சாதாரண தரப் பரிட்சையில் சித்தியடைந்த மன்.நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு-(படம்)
கடந்த வருடம் 2017 ஆண்டு இடம் பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரிட்சையில் சித்தியைப் பெற்று சாதனை படைத்த மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்ளுக்கு இன்று (4) புதன் கிழமை மதியம் பாடசாலையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு, மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலையில் இருவர் க.பொ.த சாதாரணதரப் பரிட்சையில் '9ஏ' சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்களான ஜீவாஜெயதீசன் அனோ ஜெயந் மற்றும் அருட் பிரகாசம் டினேசியஸ் ஆகிய இரு மாணவர்களுமே '9ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.
-மேலும் குறித்த பாடசாலையில் '5ஏ' க்களுக்கு மேல் பெற்றுக் கொண்ட குறித்த பாடசாலையைச் சேர்ந்த மேலும் 10 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு குறித்த மாணவர்களை கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

இதன் போது வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலையில் இருவர் க.பொ.த சாதாரணதரப் பரிட்சையில் '9ஏ' சித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்களான ஜீவாஜெயதீசன் அனோ ஜெயந் மற்றும் அருட் பிரகாசம் டினேசியஸ் ஆகிய இரு மாணவர்களுமே '9ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.
-மேலும் குறித்த பாடசாலையில் '5ஏ' க்களுக்கு மேல் பெற்றுக் கொண்ட குறித்த பாடசாலையைச் சேர்ந்த மேலும் 10 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர், மன்னார் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டு குறித்த மாணவர்களை கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

க.பொ.த சாதாரண தரப் பரிட்சையில் சித்தியடைந்த மன்.நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு-(படம்)
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment