உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியல் வெளியானது: முதலிடம் யார் தெரியுமா? -
குறித்த பட்டியலில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா இரண்டாவது இடத்திலும், தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 17-வது இடத்திலும் உள்ளனர்.
கால்பந்து உச்ச நட்சத்திரங்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் முறையே 10 மற்றும் 11-வது இடத்தில் உள்ளனர்.
பிரித்தானியர்களால் அதிகம் மதிக்கப்படும் நபர்களாக ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் டேவிட் அட்டன்பரோ ஆகியோர் உள்ளனர்.மட்டுமின்றி பிரித்தானிய அரச குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் இளவரசர் ஹரி 4-வது இடத்திலும், இளவரசர் வில்லியம் 7-வது இடத்திலும் இளவரசர் பிலிப் 9-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த மாதம் காலமான பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் 3-வது இடத்தில் உள்ளார். கத்தோலிக்க மத தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் 16-வது இடத்தில் உள்ளார்.
இதேபோன்று உலகில் மதிக்கப்படும் பெண்களின் பட்டியலில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு அடுத்து 2-வது இடத்தில் மிட்சல் ஒபாமா உள்ளார்.4-வது இடத்தில் பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத், 5-வது இடத்தில் ஹில்லரி கிளிண்டன் உள்ளார். 15-வது இடத்தில் பிரித்தானிய பிரதமர் தெரெசா மே உள்ளார்.
உலகமெங்கும் மொத்தம் 35 நாடுகளில் உள்ள 37,000 மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் குறித்த பட்டியலை YouGov நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகில் மதிக்கப்படும் ஆண்கள்:
- பில் கேட்ஸ்
- பாரக் ஒபாமா
- ஜாக்கி சான்
- ஜி ஜிங்பிங்
- ஜாக் மா
- விளாட்மிர் புடின்
- தலாய் லாமா
- நரேந்திர மோடி
- அமிதாப் பச்சன்
- கிறிஸ்டியானோ ரொனால்டோ
- ஏஞ்சலினா ஜோலி
- மிட்சல் ஒபாமா
- ஒபரா வின்ப்ரே
- இரண்டாம் எலிசபெத்
- ஹில்லரி கிளின்டன்
- எம்மா வாட்ஸன்
- மலாலா யூசப்சையி
- ஏஞ்சலா மெர்க்கெல்
- டெய்லர் ஸ்விஃப்ட்
- மடோனா
உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர்களின் பட்டியல் வெளியானது: முதலிடம் யார் தெரியுமா? -
Reviewed by Author
on
April 12, 2018
Rating:

No comments:
Post a Comment