உலகெங்கும் வாழும் புலம்பெயர் பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு! -
உலகத்தமிழரின் உறவுப்பாலம் ஐ.பி.சி தமிழின் மாபெரும் குரல்வளத்தேடல் "தங்கத்தமிழ் குரல்" போட்டி நிகழ்வானது இம்முறை 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்காக சிறப்பான களம் அமைகின்றது.
எம்மவர்கள் திறமைகளை இனம் கண்டு அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கி, சர்வதேச அரங்கில் மிளிரச்செய்யும் தமிழர்களின் ஊடக அடையாளம் ஐ.பி.சி தமிழின், இளம் பாடகர்களுக்கான இப்போட்டி நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்களை thangatamilkural.com என்னும் இணையத்தில் மேற்கொள்ளலாம்.
இளம் தங்கத் தமிழ்க் குரல் என முடிசூடி, முதலாவது பரிசுத்தொகையாக £5,000 பணப் பரிசிலையும், இரண்டாவது பரிசுத்தொகையாக £3000 இனையும், மூன்றாவது பரிசுத் தொகையாக £2000 இனையும் வெற்றியீட்டப்போகும் திறமைசாலி நீங்கள் எனில், இன்றே thangatamilkural.com என்னும் இணையம் ஊடாக உங்கள் விண்ணப்பத்தினை பதிவிடுங்கள்.
அளவுகடந்த மக்களின் வேண்டுகோளுக்கும் இணங்க, விண்ணப்ப முடிவு திகதி 30/04/2018 ஆக நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
உலகெங்கும் வாழும் புலம்பெயர் பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு! -
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment