அமெரிக்கா அறிவிப்பு -வடகொரியாவுக்கு நிதியுதவி:
தென் கொரொயாவுடன் இணைந்து செயல்படுவது போலவே வடகொரியாவுடனும் செயல்பட அமெரிக்கா தயாராகி வருவதாகவும் வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள பாம்ப்யோ, கிம் ஜாங் உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் வைத்து இருநாட்டு தலைவர்களும் முதன் முறையாக சந்தித்து பேச உள்ளனர்.
அதன் முன்னேற்பாடாகவே அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ வடகொரியா சென்று வந்துள்ளார்.
கடந்த மாதம் தென் கொரியா தலைவர்களுடன் கிம் ஜாங் உன் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பானது அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக குறிப்பிடும் பாம்ப்யோ,
கிம் ஜாங் உன் எதிர்காலம் கருதி சரியான பாதையை தெரிவு செய்தால் அது வடகொரிய மக்களின் அமைக்கும் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரியா உடனடியாக உறுதியான முடிவை கைக்கொண்டு அணுஆயுதம் இல்லா கொரியா பிராந்தியத்தை கட்டமைக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியாவை பொறுத்தமட்டில் பொருளாதார வளர்ச்சி பெற்ற உலகின் 20 நாடுகளில் ஒன்றாக உள்ளது.
தென் கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)என்பது 1.4 ட்ரில்லியன் டொலர்.ஆனால் வடகொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 20 பில்லியன் டொலருக்கும் குறைவே. இந்த நிலையிலேயே நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க இருப்பதாக சமீபத்தில் கிம் ஜாங் உன் அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா அறிவிப்பு -வடகொரியாவுக்கு நிதியுதவி:
Reviewed by Author
on
May 12, 2018
Rating:
No comments:
Post a Comment