தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமை திடீர் ஆய்வு செய்த டிஎஸ்பி:
அப்போது அவர், அங்கிருக்கும் குடும்பங்கள், வருகை பதிவேடு, வெளியில் சென்று வேலை செய்பவர்கள் மற்றும் படிக்கும் மாணவர்களின் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து முகாமில் இருக்கும் அகதிகளிடம், இலங்கை தமிழர்கள் அரசின் அனுமதி பெறாமல் பிற நாடுகளுக்கோ, இலங்கைக்கோ செல்வது சட்டத்திற்கு விரோதமானது.
குறிப்பாக அனுமதி பெறாமல் படகில் கடல் வழியாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பி செல்ல முயல்வது அடிக்கடி நடைபெறுகிறது.
அதுமட்டுமின்றி வெளிநாட்டிற்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்று கூறி ஏமாற்றும் நபர்களிடம் லட்சக்கணக்கில் பணங்களை கொடுத்து பலர் ஏமாறியுள்ளனர்.
கடலின் ஆபத்து தெரியாமல், படகிலே சென்று வழியில் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.
இதனால் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் இந்திய சட்டத்திட்டங்களை மதித்து இருக்க வேண்டும். நீங்கள் வேறு நாட்டிற்கு செல்ல விரும்பினால் உரிய முறையில் அனுமதி பெற்று செல்லலாம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமை திடீர் ஆய்வு செய்த டிஎஸ்பி:
Reviewed by Author
on
June 11, 2018
Rating:

No comments:
Post a Comment