உலகிலேயே மிக மோசமான விமான நிலையங்கள் இவை தானாம்:
Eindhoven விமான நிலையம் உலகின் 10 வது மோசமான விமான நிலையம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாமதத்திற்கு இழப்பீடு வழங்கி மக்களுக்கு உதவும் நிறுவனமான Airhelp, உலகளவில் 141 விமான நிலையங்கள் இடையே நடத்திய ஆய்வின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டது.
Eindhoven இற்கு வரும் விமானங்கள் மற்றும் Eindhoven இல் இருந்து செல்லும் விமானங்கள் ஒப்பீட்டளவில் தாமதமாக உள்ளன.
மேலும் இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும்பாலும் Eindhoven விமான நிலையம் பற்றி எதிர்மறையான கருத்துக்களையே கொண்டுள்ளனர்.
நெதர்லாந்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கும் Eindhoven விமான நிலையம் கடந்த ஆண்டு 5.7 மில்லியன் பயணிகள் கையாண்டது.
இந்த விமான நிலையம் காலந்தவறாமைக்கு 5.9 புள்ளிகளை பெற்றது. பயணிகளின் உணர்வுகளுக்கு 5.1 புள்ளியை பெற்றது. Eindhoven சேவையின் தரமானது சிறப்பாக செயல்பட்டதால், 7 புள்ளியை பெற்றது. விமான நிலையத்தின் மொத்த மதிப்பெண் 6.39 ஆக மதிப்பிடப்பட்டது. தரவரிசையில் 132 வது இடத்தில் Eindhoven விமானநிலையம் இடம்பெறுகிறது.
உலகிலேயே மிக மோசமான விமான நிலையங்கள் இவை தானாம்:
Reviewed by Author
on
June 12, 2018
Rating:

No comments:
Post a Comment