அண்மைய செய்திகள்

recent
-

அகதி குடும்பத்துக்கு ஏற்பட்ட பரிதாபம் -மனிதநேயம் செத்து விட்டதா?


2015 அகதிகள் பிரச்சினையின்போது அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில் இன்று மனிதாபிமானம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது அகதி ஒருவரின் கதையைக் கேட்கும்போது.
Merita Sali, Kosovo நாட்டைச் சேர்ந்த ஒரு அகதி. அவரும் அவருடைய கணவர் Hysret Sali மற்றும் அவர்களது நான்கு பிள்ளைகளும் 2014இலிருந்து ஜேர்மனியில் வசித்து வந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக Merita தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற்போல் அவரது கணவரும் குழந்தைகளும் Kosovo நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

இதற்கிடையில் Merita Sali உடல் நலம் தேறியதும் அவரும் நாடு கடத்தப்பட உள்ளார். ஏற்கனவே Hysret சித்திரவதை அனுபவித்த Kosovo நாட்டில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை.
ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று Meritaவின் 3 வயது மகள் Jehonaவுக்கு இதய நோய் வேறு இருக்கிறது.
அகதியாக வந்தவரான Aleksandar Ceh, தன் போன்ற அகதிகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்யும் ஒருவர்.

அவர் பல மருத்துவர்கள், மன நல நிபுணர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றும், மனிதநேய அடிப்படையில் நாடு கடத்தல்களை ரத்து செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு ஒன்றிடம் தகவலளித்தும் வழக்கறிஞர்கள் உதவியால் முயற்சித்தும் இந்த நாடு கடத்தலை தடுக்க அவரால் இயலவில்லை.
அகதிகளுக்கு 16 ஆண்டுகளாக உதவி வருகிறேன், இது போன்ற ஒரு மனிதாபிமானமற்ற செயலை நான் இதுவரை பார்த்ததில்லை என்கிறார் அவர்.
மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படும் நாளை குழப்பமான மன நிலைமையுடன் எதிர் நோக்கி இருக்கிறார் எதிர்காலம் என்னவாகுமோ என்று தெரியாத அகதி ஒருவர்.

அகதி குடும்பத்துக்கு ஏற்பட்ட பரிதாபம் -மனிதநேயம் செத்து விட்டதா? Reviewed by Author on July 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.