-நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் மரிய சீலனின் முயற்சியினால் ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு-(படம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.மரிய சீலனின் கோரிக்கைக்கு அமைய மீள் குடியேற்ற அமைச்சர் ரீ.எம்.சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்ட ஒரு தொகுதி பொருட்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் ஏ.எஸ்.எம். பஸ்மி அவர்களின் ஒத்துழைப்போடு நேற்று திங்கட்கிழமை(30) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கட்டையடம்பன், பண்ணை வெட்டுவான், சோதிநகர், தம்பனைக்குளம், பூமலர்ந்தான், மாதகிராமம், பெரிய முறிப்பு ஆகிய கிராமங்களின் அணைத்து விளையாட்டுக் கழகங்களுக்கு சீருடைகளும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கட்டையாடம்பன் கிராமத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 30 அடி கொண்ட பந்தல் தொகுதியும, பண்ணை வெட்டுவான் கிராமத்துக்கு 50 ஆயிரம் ரூபாக்குக்கு ஒரு தொகுதி கதிரை மேசைகளும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மடு பிரதேச செயலாளர் ஜெயதரன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் றொகான் குருஸ் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-நானாட்டன் பிரதேச சபை உறுப்பினர் மரிய சீலனின் முயற்சியினால் ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு-(படம்)
Reviewed by Author
on
July 31, 2018
Rating:

No comments:
Post a Comment