விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து! நாடாளுமன்றில் பிரதமரின் விசேட உரை
அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டின் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவை எமக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்விலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில், அவரிடம் கேட்டறிந்துகொள்வதற்கு கொழும்புக்கு அழைத்துள்ளேன்.
சுகயீனம் காரணமாக அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளார். இன்றைய தினம் கொழும்புக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்.
அவர் வந்தவுடன் அவரிடம் கேட்டறிந்துகொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது. அவருடைய உரைக்கு ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்ததால் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து! நாடாளுமன்றில் பிரதமரின் விசேட உரை
Reviewed by Author
on
July 04, 2018
Rating:

No comments:
Post a Comment