லண்டனில் இந்தாண்டில் இலங்கையர் உட்பட 100 பேர் படுகொலை!
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இந்த வருடத்தில் இலங்கையர் உட்பட 100 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு லண்டனில் உள்ள Teddington பகுதியில் 73 வயதான நபர் ஒருவரே நூறாவது நபராக இறுதியாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபரின் மரணத்தையடுத்து லண்டனில் 100வது மரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஆரம்பிக்கும் போதே லண்டனில் 3 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2017ஆம் ஆண்டு மொத்தமாகவே 116 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் கடந்த எட்டு மாதங்களில் 100 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பெப்ரவரி மாதத்தில் 15 கொலைகளும், மார்ச் மாதத்தில் 19 கொலைகளும் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
மே மாதம் 20ஆம் திகதி இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அருனேஷ் தங்கராஜா என்ற 28 வயதான இலங்கை இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலை தொடர்பில் 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் இந்தாண்டில் இலங்கையர் உட்பட 100 பேர் படுகொலை!
Reviewed by Author
on
August 25, 2018
Rating:

No comments:
Post a Comment