கொலை வழக்கில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை
வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் குத்திக் கொன்றதற்காக 43 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) மரண தண்டனை விதித்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.
2010 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி அன்று களனியில் ரோய் பீரிஸ் என்ற நபரை ஆயுதத்தால் குத்திக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதன்படி, இந்த தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கொலை வழக்கில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை
Reviewed by Vijithan
on
August 21, 2025
Rating:

No comments:
Post a Comment