மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களால் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று சனிக்கிழமை (26) கேக் வெட்டி கொண்டாடினர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்கள் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பிரபாகரனின் 67வது பிறந்த நாளை மண்டபம் முகாமில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இரவு கேக் வெட்டி கொண்டாடினர்.
மண்டபம் இலங்கை தமிழர் முகாம் வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படத்தை அச்சிட்டு கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடினர். அப்போது பிரபாகரன் வாழ்க, அவரின் புகழ் வளர்க என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
மண்டபம் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களால் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் கொண்டாட்டம்.
Reviewed by Author
on
November 27, 2021
Rating:

No comments:
Post a Comment