துரையம்மா அன்பகத்தின்10ம் ஆண்டினை முன்னிட்டு கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தில்....படங்கள்
துரையம்மா அன்பகத்தினர் கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவர்களின் 16 குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவு பொதிகள் 19-08-2018 காலை 10-30 மணியளவில் வழங்கும் நிகழ்வில் கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமசேவகர் பிரிவில் மாதர்சங்க தலைவி உறுப்பினர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இவ்நிகழ்வில் தற்போதைய வாழ்க்கைச்சூழலில் பொருளாதாரப்பிரச்சினையினால் கல்வியை தொடரமுடியாத நிலையில் நிறைய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் அவ்வாறில்லாமல் எமக்கான கல்விச்செயற்பாட்டை சேவையாக ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர்.(ஸ்தாபகர் திரு.உதயன் மறைந்த பின்பும் எமது கிராமத்தின் மாணவர்களின் நலனில் அக்கறையுடன்) தொடர்ந்து தமது சேவையை செயலாற்ற நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் எமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு நல்ல முன்னேற்றத்தினை அடைவதோடு வளமான கல்விச்சமூகத்தினை உருவாக்கலாம் என்றார் மாதர்சங்கதலைவி
எமது சேவை தொடரும்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்

துரையம்மா அன்பகத்தின்10ம் ஆண்டினை முன்னிட்டு கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தில்....படங்கள்
Reviewed by Author
on
August 20, 2018
Rating:

No comments:
Post a Comment