5 கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முறியடித்த சேலம் கராத்தே வீரர்...
சேலத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் ஒருவர் 5 வகை கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முயறியடித்துள்ளார்.
சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நடராஜ், கராத்தே பயிற்சியாளர். பள்ளி மாணவர்களுக்கு கராத்தே கலையை இவர் கற்றுக்கொடுத்து வருகிறார்.
கின்னஸ் அமைப்பின் முறையான அனுமதி பெற்று சனிக்கிழமை அவர் இந்த சாதனை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
உறிஞ்சு குழல் வைத்து 2 சாதனைகள்
650 ஸ்ட்ராவை (உறிஞ்சு குழல்) கையால் பிடிக்காமல் 2.10 நிமிடம் தனது வாயில் வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் மகா ராணா என்பவர் கடந்த ஆண்டு நிகழ்த்திய சாதனை நிகழ்வில், 459 ஸ்ட்ராவை வாயில் நுழைத்து 10 வினாடி வரை வைத்திருந்த கின்னஸ் சாதனையை நடராஜ் முறியடித்துள்ளார்.
இரண்டாவது சாதனையாக 692 ஸ்ட்ராவை கையால் பிடித்துக்கொண்டு வாயில் 2.56 நிமிடம் வைத்து நடராஜ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மும்பையை சேர்ந்த கின்னஸ் ரிஷ் என்பவர் 496 ஸ்ட்ராவை கையால் பிடித்து 10 வினாடி வாயில் வைத்து 2011ஆம் ஆண்டு நடத்திய சாதனையை நடராஸ் இதன் மூலம் முறியடித்துள்ளார்.
ஆணியை மூக்கில் நுழைத்து 2 சாதனை
தொடர்ந்து மூன்றாம் சாதனை முயற்சியாக நாடராஜ் 4 அங்குல அளவுள்ள ஆணிகளை ஒவ்வென்றாக எடுத்து 30 நிமிடத்தில் 18 முறை மூக்கில் நுழைத்து சாதனை நிகழ்த்தினார்.
இதன் மூலம், 2015 ஆம் ஆண்டு கனடா நாட்டை சேர்ந்த பர்னாபி கியூ ஆர்பெக்ஸ் என்பவர் செய்த சாதனையான 4 அங்குல ஆணிகளை 30 வினாடியில் 15 முறை மூக்கில் நுழைத்ததை முறியடித்துள்ளார்.
அதேபோல், புதிய முயற்சியாக 4 அங்குல ஒரு ஆணியை 30 வினாடியில் 32 முறை மூக்கில் நுழைத்து புதிய சாதனையை நடராஜ் படைத்துள்ளார்.
தலைகீழாக தொங்கி தண்ணீர் குடித்தல்
இதனை தொடர்ந்து, கயிற்றை பிடித்துக்கொண்டு தலைகீழாக தொங்கியவாறு 45 வினாடியில் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவர் 560 மில்லி லிட்டர் வரை குடித்து புதிய சாதனையும் படைத்துள்ளார்.
அரசு தனக்கு உதவி செய்தால் இன்னும் அதிக அளவிலான கின்னஸ் சாதனைகளை நனவாக்குவேன் நடராஜ் உறுதிபட தெரிவித்தார்.
5 கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முறியடித்த சேலம் கராத்தே வீரர்...
Reviewed by Author
on
August 27, 2018
Rating:

No comments:
Post a Comment