அண்மைய செய்திகள்

recent
-

பங்களாதேஷில் ஆட்கடத்தல், பாலியல் தொழிலில் சிக்கும் அகதிகள்! -


பங்களாதேஷில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய அகதி முகாம்களாக பார்க்கப்படும் ரோஹிங்கியா அகதி முகாம்களில் உள்ள மக்கள் ஆட்கடத்தல், பாலியல் தொழில் உள்ளிட்ட சுரண்டலில் சிக்கும் அவலம் வளரத் தொடங்கியுள்ளது.

இந்த நெருக்கடியில் சிக்கியுள்ள பெண்கள் போலியான வேலைகளில் சிக்கி பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், முகாமின் மக்கள் தொகையில் 56 சதவீதக்கும் மேலாக உள்ள 17 வயதிற்குட்பட்ட சிறியவர்கள் ஆட்கடத்தலின் முக்கிய இலக்காகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“முகாமில் பாலின அடிப்படையிலான வன்முறை நடக்கின்றது. அதாவது பாலியல் வன்முறைக்கான வாய்ப்பு அதிகம். ஆட்கடத்தல் நடக்கின்றது. பெண்கள் கடத்தப்படுகின்றனர்” என அவசரகால உதவி திட்டத்தின் மேலாளர் டாம் பெட்கோஸ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஒகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர்.

மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை இனச் சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச் சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப் புத்தகம் இது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
பங்களாதேஷில் ஆட்கடத்தல், பாலியல் தொழிலில் சிக்கும் அகதிகள்! - Reviewed by Author on August 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.