நிலநடுக்கம்: அனாதையாக்கப்பட்ட 80 பிள்ளைகள்... பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு -
இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் இன்று மாலை உள்ளூர் நேரப்படி 7.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதனால் இறப்பு எண்னிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதனிடையே சுமார் 80 பிள்ளைகள் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை பின்னர் இந்தோனேசிய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த வாரம் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கம்: அனாதையாக்கப்பட்ட 80 பிள்ளைகள்... பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு -
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment