'புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது': 5 திருப்புமுனை தருணங்கள்

புதினின் பதவிக்காலம் வரும் 2024 ஆம் ஆண்டு வரை தொடரும்.
"புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது" என்ற கோஷத்தை ரஷ்ய அரசு அதிகாரிகளின் துணை தலைவர் மட்டுமல்லாது மில்லியன்கணக்கான ரஷ்ய மக்களும் எதிரொலித்ததன் காரணமாக அந்நாட்டின் அதிபராக புதின்.நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேஜிபி என்னும் சோவியத் ஒன்றியத்தின் தேசிய பாதுகாப்பு முகமையில் யாருமறியாத முகவராக செயல்பட்ட புதின், அந்நாட்டின் பலமிக்க தலைவர் என்ற நிலைக்கு உயர்வதற்கும், தேர்தலில் 76 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று நான்காவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் வித்திட்ட அவரது வாழ்வின் 5 திருப்புமுனை தருணங்களை பட்டியலிடுகிறது இந்த தொகுப்பு.
1. பாடம் கற்றுத்தந்த பனிப்போர்

பனிப்போரின் இறுதிக் காலம்தான் புதினின் வாழ்க்கையில் தொடக்கக்காலத்தை கட்டமைத்தது.
1989 ஆம் ஆண்டு நடந்துகொண்டிருந்த கிளர்ச்சியின்போது புதின் சோவியத் ஒன்றியத்தின் தேசிய பாதுகாப்பு முகமையில் கீழ்நிலை முகவராக தற்போது ஜெர்மனியிலுள்ள ட்ரேஸ்ட்டேன் நகரில் நியமிக்கப்பட்டார்.
அப்போது, ரஷ்ய ஒன்றியத்தையும், கேஜிபியையும் எதிர்த்து நடைபெற்ற பல்வேறு முற்றுகை சம்பவங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாக ரஷ்ய ஒன்றியம் உடைந்ததுடன், அது புதினுக்கு பல பாடங்களை புகட்டியது.
2. மேயரின் வலதுகரமாக திடீரென உருவெடுத்த புதின்
சோவியத் ஒன்றியம் உடைந்து ஜெர்மனி உருவானவுடன் தனது சொந்த நகரமான லெனின்கிரேடுக்கு திரும்பினார் புதின்.
அந்நகரத்தின் புதிய மேயராக பதவியேற்ற புதினின் பல்கலைக்கழக பேராசிரியரான அனடோலி சோப்சக், ஆச்சர்யமளிக்கும் வகையில், அதுவரை அரசியல் அனுபவமே இல்லாத தன்னுடைய முன்னாள் மாணவருக்கு அரசியல்ரீதியான பதவியை அளித்தார்.
அனடோலியின் உதவியாளரான உருவெடுப்பதற்கு முன்னரே, புதின் தன்னுடைய பழைய நட்புகளை புதுப்பிப்பதிலும், புதிய தொடர்புகளை உருவாக்குவதிலும் தேர்ந்து செயல்பட்டார்.
3. எதிர்பார்க்காத அதிபர் பதவி

ரஷ்யாவின் முன்னாள் அதிபரான எல்ட்சின் தனது பதவியை 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் ராஜினாமா செய்ய, பெரிசோவ்ஸ்கை மற்றும் மற்ற முக்கிய தன்னலக்குழுக்கள் புதினை பரிந்துரை செய்ததால் எவரும் எதிர்ப்பார்க்காத வகையில் நாட்டின் செயல் அதிபராக அறிவிக்கப்பட்டார்.
4. ஊடகங்கள் முடக்கம்

பதவிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே புதின் ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினார்.
தன்னலக்குழுக்கள் மற்றும் கிரெம்ளினின் முன்னாள் பாதுகாவலர்கள் சிறிதும் எதிர்பாராத வகையில் புதின் எடுத்த மிக முக்கியமான முடிவாக இது கருதப்படுகிறது.
புதின் ஊடகங்களின் செயல்பாடுகளை முடக்கியதன் மூலம் தன் மீதான விமர்சனங்கள், மாஸ்கோ தீவிரவாத தாக்குதல் குறித்த செய்தி போன்றவை மக்களை சென்றடையாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அதிபரின் புகழ் மதிப்பீட்டை உயர்த்தவும், புதிய ரஷ்யா உருவானது போன்ற பிம்பத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் புதிய எதிரிகளை தெரிவிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்
ரஷ்ய மக்கள் தொலைக்காட்சியில் என்ன பார்க்க வேண்டுமென்பதை புதின் முடிவுசெய்கிறார்; தற்போது ரஷ்யாவில் 3,000 தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை செய்திகளை வழங்குவதை தவிர்க்கின்றன. அதையும் மீறி வேறேதாவது அரசியல் சார்ந்த நிகழ்வுகள் நடந்தால் அது அரசாங்கத்தால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.
5. "என்னுடன் மோதாதீர்கள்": மாகாணங்களுக்கு விடுத்த எச்சரிக்கை

மாகாண கவர்னர்களுக்கான தேர்தலை 2004 ஆம் ஆண்டு ரத்து செய்த புதின், தனது நம்பிக்கைக்குரிய அரசியல்வாதிகளை 89 பிராந்தியங்களின் கவர்னர்களாக நியமித்தார்.
அதற்கு பதிலாக அவர் மூன்று வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து, அதிலிருந்து ஒருவரை பிராந்திய சட்டமன்றங்கள் தங்களின் அடுத்த கவர்னரை தேர்வுசெய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்.
புதினை விமர்சகர்கள் "ஜனநாயகத்தை ரத்து செய்வதாக" குற்றஞ்சாட்டினாலும், அவரின் திட்டமே கடைசியில் வெற்றிபெற்றது.
'புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது': 5 திருப்புமுனை தருணங்கள்
Reviewed by Author
on
August 20, 2018
Rating:

No comments:
Post a Comment