மன்னார் நோக்கி சென்ற வான் விபத்து - A32 வீதியில் சம்பவம்
மன்னார் நோக்கி சென்ற வான் விபத்து - A32 வீதியில் சம்பவம்
யாழ்ப்பாணம் மன்னார் ஏ 32 பிரதான வீதி பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரு நபரும் ஏழு வயதுடைய ஒரு குழந்தையும் பயணித்துக் கொண்டிருந்த பொழுது எதிரே வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களை மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி அழைத்துச் சென்ற வான் ஒன்று மோதியதில் குறித்த மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளது இதில் குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் அவருடன் பயணித்த குழந்தையும் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கதாகும் .
Reviewed by Vijithan
on
June 30, 2025
Rating:


No comments:
Post a Comment