தெளிவாக கனவு காணும் புதிய முறை விஞ்ஞானிகளால் உருவாக்கம் -
இங்கு கனவு காண்பவர் தான் கனவு கண்டுகொண்டிருப்பதை உணரமுடிகிறது - இது அவர்கள் நேரில் பார்ப்பது போன்று யதார்த்தமானது.
கவலைக்கிடமாக, நம்மில் அரைப்பங்கினர் எப்போதாவது தெளிவான கனவைப் பார்க்கின்றோம், அந்த நிகழ்வைத் தூண்ட முயற்சிக்கும் போது கலவையான முடிவுகளையே பெற நேரிடுகிறது.
ஆனால் தற்போது புதிய ஆய்வு, தெளிவான கனவைத் தூண்டும் மிகத் திறமையான வழியை வழங்குவதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
தமது முன்னைய ஆய்வைக் கட்டியெழுப்பியபடி, Wisconsin–Madison பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் Hawaii இலுள்ள உளத் தெளிவு நிறுவனமும் சேர்ந்து acetylcholinesterase inhibitors (AChEls) எனும் இரசாயனம் எவ்வாறு தெளிவான கனவைத் தூண்டக்கூடும் என்பது பற்றி ஆராய விரும்பியிருந்தனர்.
நரம்புமுளைக் கடத்தியான acetylcholine ஆனது REM வகை நித்திரையை ஒழுங்குபடுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் AChEls ஆனது acetylcholine இனை செயற்படாது செய்யும் acetylcholinesterase எனும் நொதியத்தை தடைசெய்வதன் மூலம் இம் மூலக்கூறு மூளையில் சேகரிக்கப்பட உதவுகின்றது.
இது நடைபெறும் போது, Alzheimer நோயின் போது உண்டாகும் ஞாபகசக்திக் குறைவை மீட்கப் பயன்படுத்தப்படும் பொதுவான மருந்து - galantamine - இது ஒரு விரைவாகச் செயற்படும் AChEI, இதனால் உண்டாகும் பக்கவிளைவுகள் மிக அரிது, ஆகையால் ஆய்வாளர்கள் 121 பேரை அழைத்து இம் மருந்து தெளிவான கனவு காண்பதில் எவ்வகையான விளைவைக் கொடுக்கின்றது என்பதை ஆராய்ந்திருந்தனர்.
இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தவர்கள் முன்னர் தெளிவான கனவைத் தூண்டும் நெறிமுறைகள் பற்றிப் பயிற்சி எடுத்திருந்தனர். இப் பயிற்சி galantamine சிகிச்சையுடன் இணைக்கப்பட்டிருந்த போது தெளிவான கனவு ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது. இதன் உயர் அளவு அதிக பலனையும் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தெளிவாக கனவு காணும் புதிய முறை விஞ்ஞானிகளால் உருவாக்கம் -
Reviewed by Author
on
August 24, 2018
Rating:

No comments:
Post a Comment