மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் -
இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. இந்த கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து மாரடைப்பு ஏற்படுகின்றது.
மாரடைப்பின் முக்கிய காரணங்கள்
- உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ரத்தக் குழாய்கள் வீங்குவதால், இதயத்துக்கு ரத்தம் செல்வது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்படும். இதனால், ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படும்.
- உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் வந்துவிடும். சர்க்கரை நோய், உடல் பருமன் இரண்டும் ஒன்று சேரும்போது, கரோனரி ரத்தக் குழாய்கள் வீங்கி, மாரடைப்பு வரலாம்.
- கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருக்கும்பட்சத்தில், அவை இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் மெள்ளமெள்ள படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும்.
- சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாத சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும்.
- கையிலையில் உள்ள நிக்கோடின் மற்றும் சில வேதிப் பொருட்கள் மெள்ள மெள்ள நுரையீரலில் படிந்து, நுரையீரலின் செயல்திறனைக் குறைத்து மாரடைப்பு ஏற்படுத்தும்.
மாரடைப்பை தடுக்கும் உணவு முறைகள்
- அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதற்காக இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
- காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றைஅடிக்கடி சாப்பிட வேண்டும். அதோடு பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகிய உணவுகளும் உடலின் வளர்ச்சிக்கு தேவையானது.
- நல்ல கொழுப்பை கொடுக்கும் தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகிய உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மீன், நண்டு, இறால், கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கான சத்துக்களை பெறலாம்.
மாரடைப்பு வராமல் தடுக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் -
Reviewed by Author
on
August 24, 2018
Rating:

No comments:
Post a Comment