கல்லீரல் சுருக்க நோயை தடுக்கும் வழிமுறைகள் -
இத்தகைய கல்லீரல் சுருக்கம் ஏற்படுவதற்கான காரணத்தையும், தடுக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.
கல்லிரலில் சுருக்கம் நோய் வருவதற்கான காரணங்கள்
- ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
- நாம் உணவு மற்றும் தண்ணீரின் மூலம் உடலுக்குள் ஹெபடைட்டிஸ் ஏ பரவக்கூடியது. மேலும் இந்த வைரஸால் உடலில் மஞ்சள் காமாலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
- ஹெபடைட்டிஸ் பி, ரத்தம் மூலமாகவும் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாகவும் பரவும்.
- ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது.
- அதிக அளவு மது அருந்தும்போது, அதில் உள்ள வேதிப்பொருள், கல்லிரலின் பணிகளைப் பாதிக்கிறது. இதனால் கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது
- கல்லிரல் சுருக்கம் நோய ஏற்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, பசி இன்மை, மன அழுத்தம், வயிற்று வலி போன்றவை ஏற்படும்.
தடுக்க வழிமுறைகள்
- கொழுப்புக்கள் அதிகம், நிறைந்த உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.ஏனெனில் அதிக கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படுத்தும்.
- மது அருந்துவதை முழுமையாக தவிர்த்தாலே பெரும்பாலான கல்லீரல் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை.
- கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய கல்லீரல் செயல்திறன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, அல்ட்ராசானிக் பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது.
- உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வெயிலில் நடத்தல், நீண்ட பயணம் ஆகியன தவிர்த்து தினமும் கல்லீரல் 30 சதவிகிதம் வரை வேலை செய்தால்கூடப் போதுமானது.
கல்லீரல் சுருக்க நோயை தடுக்கும் வழிமுறைகள் -
Reviewed by Author
on
August 19, 2018
Rating:

No comments:
Post a Comment