டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்தார் விராட் கோஹ்லி!
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது
முதல் டெஸ்டில் இந்திய அணி தலைவர் கோஹ்லி 200 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம்பிடித்தார்.
லார்ட்ஸ் டெஸ்டில் 40 ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால், 2-வது இடத்திற்கு இறங்கினார். டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் மொத்தமாக அவர் 200 ஓட்டங்களை சேர்த்தார். இதன்மூலம் மீண்டும் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 2-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்தார் விராட் கோஹ்லி!
Reviewed by Author
on
August 24, 2018
Rating:

No comments:
Post a Comment