அண்மைய செய்திகள்

recent
-

மணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமன்! – கஜேந்திரகுமார்


வட தமிழீழம், முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி 28-08-2018 காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் மகிந்த றாஜபக்சதான் தமிழ்இன அழிப்பினை செய்கின்றார் அவருடைய ஆட்சியனை விழுத்தினால் தமிழ்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதை மட்டுமல்ல பொறுப்புக்கூறலும் நிச்சயமாக கிடைக்கும் ஒரு சர்வதேச விசாரணை கூட கிட்டும் என்று மக்களை நம்பவைத்து இந்த ஆட்சியினை மாத்தியதன் பிற்பாடு இன்று இந்த நல்லாட்சி என்று எம்மவர்கள் கூறியதன் பின்பும் இன அழிப்பி;ன் முக்கியமான அங்கம் நிலப்பறிப்பு இப்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

இவ்வாறு இருந்தால் எம்மக்கள் ஆழமாக சிந்திக்க தொடங்கவேண்டும் இது ஒரு ஆட்சி சம்மந்தப்பட்ட விடயமா அல்லது இனஅழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இது ஒரு இனஅழிப்பு சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தால் ஒரு ஆட்சியனை விழுத்தினால் புதிய ஆட்சி வந்தால் இனஅழிப்பினை தடுக்கலாமா என்று நாங்கள் கேள்வி எழுப்பவேண்டும் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எமக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பி இன்று நடுத்தெருவில் நிக்கின்றோம்.

அப்படியாக இருந்தால் இந்த ஏமாற்றத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் இனஅழிப்பிற்கு பின்னால் இருக்க்கூடிய தத்துவத்தை அந்த கொள்கையினை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும் சிங்களவர்களை பொறுத்தமட்டில் இந்த இலங்கை தீவு சிங்களபௌத்த நாடு அவர்களுக்குத்தான் சொந்தம் என்று நிகைக்கின்றார்கள்.

இன்று வடகிழக்கில் தமிழர் ஒரு தேசமாக வாழக்கூடாது என்பதில் அவர்கள் மிகத்தெளிவாக இருக்கின்றார்கள்.

இது ஆட்சி சம்மந்தப்பட்ட விடயம் அல்ல அவர்கள் இனம் சார்ந்த அடிப்படைக்கொள்கை எந்த நபர் மாறினாலும் அந்த கொள்கை ஒன்று தமிழ் தேசத்தினை பொறுத்தமட்டில் நாங்கள் போராடினால் எங்கள் உரிமைகளை பெறலாம் எதோ 16 இல தீர்வு 17 இல தீர்வு 18இல தீர்வு என்றும் இப்ப 19 இல தீர்வு வரும் என்று கூறு தமிழர்களை ஏமாற்றக்கூடாது நாங்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டும்.

மணலாறு மண் பறிபோனல் தமிழர் தாயகம் பறிபோனதற்கு சமம் தென்தமிழ் தேசத்தினை பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் அது முடிவிற்கு வர இருக்கின்றது அந்த தேசத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மணலாறு நிலத்தொடர்பை சிதைக்க அது நிச்சயமாக உறுதிபடுத்தப்படும்.

தமிழ் இனத்தினையும் தமிழ்தேசத்தினையும் பொறுத்தவரையில் இது முல்லைத்தீவு மண்ணை சார்ந்த பிரச்சனை அல்ல தமிழ்தேசத்தினை சார்ந்த பிரச்சனை தமிழரின் இருப்பு சார்ந்த பிரச்சனை இந்த இடத்தில் தமிழர்களின் ஆழத்தினை புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வோமாக இருந்தால் இந்த இனம் அழியும்.

முல்லைத்தீவு மண் பறிபோனல் மணலாறு மண் பறிபோனல் தமிழ்தேசம் பறிபோனதற்கு சமம் என்பதை விளங்கிக்கொண்டு போராடுகின்ற அனைத்து மக்களும் அணிதிரண்டு இந்த இனஅழிப்பிற்கு எதிராக தொடர்ந்தும் நம்பி ஏமாறாமல் நாங்கள் செயற்படாமல் இருக்கும் வரைக்கும் இந்த இனம் அழியும் அதனை தடுத்து நிற்பாட்ட வேண்டும் அந்த தடுப்பிற்கு முதல் புள்ளியாக இது அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மணலாறு மண் பறிபோனால் தமிழர் தேசம் பறிபோனதற்கு சமன்! – கஜேந்திரகுமார் Reviewed by Author on August 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.