உலகிலேயே முதன்முறையாக கால்பந்து போட்டிக்கு நடுவராகும் திருநங்கை!
பிரித்தானியாவை சேர்ந்த Lucy Clark (46) என்ற திருநங்கை கடந்த சில வருடங்களாகவே Nick என்ற பெயரில் ஏராளமான உள்ளூர் போட்டிகளில் நடுவராக பணிபுரிந்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி உட்பட ஒரு வருடத்தில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் நடுவராக இருந்து வருகிறார்.
30 வயதிலே தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான மாற்றம் குறித்து தன்னுடைய மனைவி Avril-டம், ஒரு நாள் இரவு அதிகமான போதையில் இருக்கும்போது கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்டு அதிர்ச்சியடையாத Avril, Lucy-க்கு உதவிகள் செய்ய ஆரம்பித்துள்ளார்.
தன்னுடைய ஆடைகளை Lucy-க்கு கொடுத்து உதவ ஆரம்பித்ததோடு,எ அவரை ஊக்குவிக்கவும் துவங்கியுள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு Lucy கூறுகையில், நிச்சசயமாக என்னை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கைக்கு உண்டு. போட்டியின் இடையே ரசிகர்கள் என்னை கேலி செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை.
எனக்கு கால்பந்தாட்ட குழுவும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் பெண்கள் கால்பந்து போட்டிக்கு மட்டும் நடுவராக இருக்கலாம் என்று தான் நினைத்திருந்தேன். அதன் பின்னர் மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆண்கள் கால்பந்து போட்டிக்கும் நடுவராக இருக்கலாம் என்ற முடிவெடுத்தேன் என கூறியுள்ளார்.
முன்னதாக இதுகுறித்து பேசிய கால்பந்தாட்ட குழுமம், Lucy-க்கு தங்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு எனவும், வேறு யாரேனும் திருநங்கைகள் திறமையுடன் இருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே முதன்முறையாக கால்பந்து போட்டிக்கு நடுவராகும் திருநங்கை!
Reviewed by Author
on
August 20, 2018
Rating:
No comments:
Post a Comment