அமெரிக்காவை தாக்கும் வகையில் போர் விமானங்களை உருவாக்கும் சீனா! -
அமெரிக்காவை குறிவைத்து அணுகுண்டுகளை வீசும் நோக்கத்தில் அதிநவீன போர் விமானங்களை சீனா உருவாக்கி வருவதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்ட்டகான் குறிப்பிட்டுள்ளது.
இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக நெடுந்தூரம் சென்று தாக்கும் போர் விமானங்களை சீன இராணுவம் மேம்படுத்தி வருகின்றது.
மேலும், கடந்த ஆண்டில் மட்டும் இராணுவ மேம்பாட்டுக்காக சுமார் 20 ஆயிரம் கோடி டொலர்களை சீனா செலவழித்துள்ளதாக பென்ட்டகான் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிக அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள சீனா, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
தற்போது உலகின் பல நாடுகளில் இராணுவ தளங்களை அமைத்து வருகின்றது. அத்துடன், ஆண்டு தோறும், இராணுவத்திற்கென அதிகப்படியான நிதியையும் சீனா ஒதுக்கி வருகின்றது.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவை குறிவைத்து அணுகுண்டுகளை வீசும் நோக்கத்தில் அதிநவீன போர் விமானங்களை சீனா உருவாக்கி வருவதாக பென்ட்டகான் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவை தாக்கும் வகையில் போர் விமானங்களை உருவாக்கும் சீனா! -
Reviewed by Author
on
August 18, 2018
Rating:

No comments:
Post a Comment