விஜய் 2018ம் ஆண்டின் உலகின் சிறந்த நடிகராக தோ்வு....
மெர்சல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக 2018ம் ஆண்டின் சா்வதேச சிறந்த நடிகராக விஜய் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மெர்சல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகா் விஜய்யை 2018ம் ஆண்டின் சா்வதேச சிறந்த நடிகராக தோ்வு செய்து IARA அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் லண்டனைச் சோ்ந்த IARA (International Achievement Recognition Awards) அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சா்வதேச அளவில் விருதுகளை வழங்கி திரைத்துறையினரை கௌரவித்து வருகிறது.
Congratulations Vijay Joseph.. Best International Actor. #bestinternationalactor https://t.co/GRqXa9YUJ4
— IARA AWARDS (@IARA_Awards) 1537660840000
2018ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் நடிகா் விஜய்யின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. நடிகா் விஜய் தவிா்த்து ஜோஷிவா ஜாக்சன், கென்னத் ஓகோலி, டாய்ம் ஹாசன் ஆகியோா் இறுதிப் பட்டிலுக்கு முன்னேறினா்.
இந்த நிலையில் மொ்சல் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நடிகா் விஜய் 2018ம் ஆண்டின் உலகின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதாக IARA அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் இந்த விருது நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான பிரிவில் பாலிவுட் நடிகா்கள் ஒருவா் கூட இடம் பெறாத நிலையில் விஜய் பரிந்துரைக்கப்பட்டு உலகின் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளாா் என்பது கூடுதல் சிறப்பு.
விஜய் 2018ம் ஆண்டின் உலகின் சிறந்த நடிகராக தோ்வு....
Reviewed by Author
on
September 23, 2018
Rating:

No comments:
Post a Comment